வெற்றியை தரும் வெற்றிலை… தெய்வங்களுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா…?

Spread the love

இந்து மத வழிபாட்டில் வெற்றிலை மிகவும் முக்கியமானது. சாஸ்திரப்படி வெற்றிலை மங்கல பொருளாகவும் செல்வத்தை ஈர்க்கக் கூடியதாகவும் வெற்றியை வரவழைக்கக் கூடியதாகவும் கருதப்படுகிறது. அப்படி இந்து மத வழிபாட்டில் வெற்றிலை மாலை சாற்றுவது என்ற ஒரு ழக்கம் இருக்கிறது. இந்த வெற்றிலை மாலை சாற்றுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன அதனால் என்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.

வெற்றிலையாக அனைத்து தெய்வங்களுக்கும் எந்த ஒரு பூஜையின் போதும் நாம் படைப்பது வழக்கமாக நடைபெறுவது தான். ஆனால் வெற்றிலை மாலையாக சாற்றும்போது அதனால் கிடைக்கக்கூடிய பலன்களும் அதிகம். எடுத்த காரியம் வெற்றி அடையும் வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. வெற்றிலை மகாலட்சுமியின் சொரூபம் ஆகும். இது செல்வத்தை ஈர்க்கும் ஒரு பொருளாகவும் கருதப்படுகிறது.

எந்த கடவுளுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம் என்று பார்த்தால் விநாயகப் பெருமானுக்கும் ஆஞ்சநேயருக்கும் மட்டும்தான் வெற்றிலையை மாலையாக மாற்ற வேண்டும். மற்ற கடவுளுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலமாக மட்டும்தான் வைத்து வழிபட வேண்டும். அதேபோல் நீங்கள் வெற்றிலை மாலை சாத்த போகிறீர்கள் என்றால் வெற்றிலை மாலை கட்டும்போது ஒற்றைப்படை எண்ணிக்கையிலேயே கட்ட வேண்டும். வெற்றிலை மாலை கட்டும்போது அதில் பாக்கும் வைத்து கட்ட வேண்டும்.

அனுமனுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. அதனால் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றும் போது சிறிது வெண்ணையும் வாங்கி கொடுத்தால் அது அதிக பலன் கிடைக்கும். வீட்டில் குழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ மகன் அல்லது மகளுக்கு நிரந்தர வேலை அமையவில்லை என்றாலோ குடும்பத்தில் ஏகப்பட்ட சண்டைகள் குழப்பங்கள் இருந்தாலோ மன சஞ்சலங்கள் இருந்தாலும் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினாலோ நினைத்தது நடைபெற வேண்டும் என்று நினைத்தாலோ இவர்கள் எல்லோரும் வெற்றிலை மாலையை சாற்றலாம். 9, 11, 21 ஆகிய எண்ணிக்கைகளில் வெற்றிலை மாலையை கட்டி சாற்ற வேண்டும்.

தீராத நோய் பணக்கஷ்டம் எடுத்த காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் மன நிம்மதி வேண்டும் என்று நினைப்பவர்கள் 108 வெற்றிலையை கொண்ட மாலையை அனுமாருக்கு சாட்சி தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக வைத்து வெண்ணையை அனுமாரின் நெஞ்சில் காப்பாக வைத்து ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து ராம் ராம் என்று கூறி வணங்க வேண்டும். தொடர்ந்து 21 சனிக்கிழமைகள் இதுபோல செய்து வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.

admin

Recent Posts

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

5 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

13 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

20 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

24 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

29 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

34 minutes ago