nayanthara

தொலைக்காட்சி தொகுப்பாளர் To இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த Lady Superstar… நயன்தாராவின் திரைப்பயணம் ஒரு பார்வை…

By admin on கார்த்திகை 18, 2024

Spread the love

எல்லா பெண்களையும் போலவே ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நயன்தாரா. எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் வளர்ந்தவர் நயன்தாரா. இவரது இயற்பெயர் டயானா மரியம் குரியன் என்பதாகும். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் கொண்டு மாடலிங் செய்து வந்தார் நயன்தாரா.

   

அதற்கு அடுத்ததாக சில மலையாளத் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார் நயன்தாரா. 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான மனசிக்கரே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் அதே நேரத்தில் ஐயா மற்றும் சந்திரமுகி இரண்டு படங்களிலும் நடித்து அறிமுகமானார். முதல் இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

   

தொடர்ந்து கஜினி பில்லா யாரடி நீ மோகினி தனி ஒருவன் போன்ற படங்களில் நடித்தார். இதற்கிடையில் பல காதல் தோல்விகளையும் படங்களில் சறுக்கல்களையும் சந்தித்தார் நயன்தாரா. இருந்தாலும் விடாப்படியாக தனது தன்னம்பிக்கை விடாமுயற்சியினால் மீண்டும் எழுந்து வந்தார் நயன்தாரா. வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நாயகனே இல்லாத நாயகி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வெற்றி பெற்று தனக்கென சினிமாவில் தனி இடத்தை தக்கவைத்துக் கொண்டார் நயன்தாரா.

 

நாயகன் இல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படங்கள் ஆன இமைக்கா நொடிகள் நெற்றிக்கண் கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்து தனது அபாரமான நடிப்பினால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் நயன்தாரா. விஜய் அஜித் ரஜினிகாந்த் ஆகிய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து புகழ்பெற்றார் நயன்தாரா.

சினிமா பின்புறம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது உழைப்பு விடாமுயற்சியினால் இன்று இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நயன்தாரா. இவரை Lady SuperStar என்றும் அழைக்கின்றனர். ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். அவரது வளர்ச்சி மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாகவும் வியக்க வைக்கும் அளவிலும் இருக்கிறது.