உலகத்தில் பல பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லோருமே பரம்பரையாக பணக்காரர்களாக இருந்தவர்கள் கிடையாது. அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு தங்களது உழைப்பு விடாமுயற்சியினால் இன்று பணக்காரர்களாக ஆகியிருப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி 14 வயதிலேயே கூலித்தொழிலாளியாக இருந்து இன்று 16 ஆயிரம் கோடி சாம்ராஜ்யத்திற்கு உரிமையாளராக இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் ஒருவராக இருக்கும் ராஜிந்தர் குப்தா பற்றி இனி காண்போம்.
ராஜிந்தர் குப்தா ட்ரைடண்ட் குழுமத்தின் முதன்மை நிறுவனமான ட்ரைடண்ட் லிமிடெட்டின் ( Trident Limited ) நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இது 16 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு முன்னணி நிறுவனம் ஆகும். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பருத்தி வியாபாரியின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ராஜிந்தர் குப்தா.
குடும்ப வறுமையின் காரணமாக ஒன்பதாம் வகுப்புக்கு பிறகு பள்ளியை விட்டு நிற்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. அதன் பிறகு மெழுகுவர்த்தி மற்றும் சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் பணியில் குறைந்த ஊதியத்தில் ஒரு நாளைக்கு 30 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்து வந்தார் ராஜிந்தர் குப்தா.
பல ஆண்டுகளாக சின்ன சின்ன வேலைகளை செய்து வந்த ராஜிந்தர் குப்தா தனது சொத்துக்களை விற்று 1955 ஆம் ஆண்டு அபிஷேக் இண்டஸ்ட்ரீஸ் என்ற உர வணிகத்தில் ரூபாய் 6.5 கோடியை முதலீடு செய்தார். 1991 இல் கட்டாய மில் என்ற கூட்டு முயற்சியை நிறுவினார். அதில் அவருக்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கியது. இதற்குப் பிறகு காகிதம் ரசாயனம் ஜவுளி வணிகங்களில் நுழைய முடிவு செய்தார் ராஜிந்தர் குப்தா.
மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாபில் பல ட்ரைடண்ட் குழும நிறுவன செயல்பாடுகளை அவர் நிறுவினார். தற்போது அவர்கள் ஜே சி பென்னி வால்மார்ட் மற்றும் லக்சரி மற்றும் லினன் போன்ற மாபெரும் சில்லறை விற்பனை தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களை தங்கள் வாடிக்கையாளர்களாக ஆக்கியுள்ளனர். 64 வயதான குப்தா வணிக நிறுவனத்தில் இவரது திறமையை வைத்து முன்னேறி இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி இவரது குழுமம் 16 ஆயிரம் கோடி நிகர மதிப்பு கொண்டுள்ளதாக இருக்கிறது. விடாமுயற்சி தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக ராஜிந்தர் குப்தா இருக்கிறார்.