bidar

14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை… சுல்தானகத்தின் நினைவு சின்னமாக இருக்கும் பிதார் கோட்டையின் வரலாறு…

By admin on ஐப்பசி 25, 2024

Spread the love

இந்தியாவில் யாரும் அறியாத பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் பிதார் கோட்டை. கர்நாடக மாநிலம் பழைய நகர பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பிதார் கோட்டை. இந்த கோட்டையை யார் கட்டினார்கள் எப்போது கட்டப்பட்டது இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

பஹ்மனிட் வம்சத்தின் சுல்தான் அஹமது ஷா 1927ல் தனது தலைநகரை குல்பர்காவில் இருந்து பித்தாருக்கு மாற்றினார். அதன் பிறகு இங்கு நினைவுகோட்டை ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதன்படி தான் இந்த பிதார் கோட்டை உருவானது. இந்த பிதார் கோட்டையில் 30க்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது.

   

இந்த பிதார்கோட்டை பல நினைவுகளை கொண்டிருக்கிறது. பஹு மணி வம்சத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி சுல்தான்களின் எழுச்சி என பல சம்பவங்களை கொண்டு இறுதியாக முகலாயப் பேரரசர் அவுரங்க சிப்பால் இந்த கோட்டை 1657-ல் கைப்பற்றப்பட்டு பராமரிக்கப்பட்டது. இந்த பிதார் கோட்டை இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. முதலில் இருந்த பழைய கோட்டை சுவர்களின் அடிவாரத்தில் தண்ணீர் தொட்டியில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப் பிறகு 15 ஆம் நூற்றாண்டில் அகமது ஷா ஆட்சி பெற்ற பிறகு பழைய கோட்டைக்கு மேலே புதுக்கோட்டையை கட்டினார். நிஜாம்களின் ஆட்சியின் போது கோட்டையில் இருக்கும் அனைத்து அரண்மனைகளும் அரசு அலுவலகங்களாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒன்று சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

 

தொல்லியல் துறை இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிறகு இந்த கோட்டை மீட்கப்பட்டு அரசு அலுவலகங்கள் எல்லாம் அகற்றப்பட்டு 1956ல் ஹைதராபாத் மாநிலம் பிரிக்கப்பட்ட போது பிதார் கோட்டை மைசூர் மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. தற்போது இருக்கும் பிதார் கோட்டை பஹ்மானியாவின் பழைய கோட்டை சுற்றி சிறப்பு லேட்டரி கல்லை பயன்படுத்தி மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த பிதார் கோட்டை ஏராளமான கட்டிடங்கள் வளைவுகள் பெவிலியர்கள் மசூதிகள் நுழைவாயில்கள் மற்றும் தோட்டங்களுடன் இருக்கின்றது. இந்த கோட்டை தனித்துவமான மூன்று வழிகள் கொண்ட அகழியால் பாதுகாக்கப்படுகின்றது. டெக்கான் சுல்தானகத்தின் நினைவுச் சின்னங்கள் மற்றும் கோட்டைகள் என்ற பெயரில் 2014 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்த பிதார் கோட்டை உலக பாரம்பரிய தளமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.