ஹீமோகுளோபின் என்பது நமது ரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள புரோட்டின் அளவாகும். இது உடலில் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி நுரையீரலுக்கு அனுப்புகிறது. ரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது தான் அதை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறுவார்கள். அப்படி ஹீமோகுளோபின் அளவு ரத்தத்தில் குறைந்தால் அது இரத்த சோகைக்கு வழிவகுக்கும்.
ஹீமோகுளோபின் குறைபாடு எதற்காக ஏற்படுகிறது என்று பார்த்தால் சரியான உணவின்மை சத்து குறைபாடு போன்றவை ஆகும். இப்படி நம் உடம்பில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து விட்டால் அதை அதிகரிக்க செய்யும் உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அப்படி எந்த உணவுகளை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் என்பதை பற்றி இனி காண்போம்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். கீரை வகைகளில் பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது மற்றும் போலேன் இருப்பதால் ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் இரும்பு சத்து போலேட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
இரும்புச்சத்து நிறைந்த பருப்பு மற்றும் தானிய வகைகள் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி அதிகமாக இருப்பதால் இது இரும்புச்சத்தை துரிதமாக உரஞ்சி உடனடியாக ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
இது தவிர ஆப்பிள், பேரிச்சை பழம், பிரக்கோலி, தர்பூசணி, பாதாம், அசைவத்தில் பார்க்க போனால் சுவரொட்டி ஆகியவை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்து ஹீமோகுளோபின் அளவை சரிவிகிதத்தில் வைத்திருக்க உதவும். எப்பொழுதும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்வது அவசியம். எல்லா வகையான சத்துக்கள் நம் உடம்பிற்கு கிடைக்கும் போதுதான் எவ்வித நோயும் இன்றி நம்மால் வாழ முடியும்.