தீபாவளியை முன்னிட்டு ஆவின் வழங்கும் Sweet Combo Offer… என்னென்ன வகைகள் தெரியுமா…?

Spread the love

ஒவ்வொரு வருடத்தில் வரும் பண்டிகைகளில் அனைவருக்கும் பொதுவாக பிடித்த பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள் ஆகியவைதான். பாரம்பரிய முறைப்படி பல தாய்மார்கள் வீட்டிலேயே பல வித விதமான பலகாரங்களை செய்வதுண்டு.

நம் பாட்டி அம்மா காலத்தில் வீட்டிலேயே முறுக்கு தட்டை அதிரசம் லட்டு ஆகியவற்றை வீட்டிலேயே செய்வார்கள். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு பலகாரம் செய்ய தெரிவதில்லை. அதற்காக தீபாவளியை கொண்டாடாமல் இருக்க முடியுமா? அனைவரும் ரெடிமேடாக இனிப்பு மற்றும் கார வகைகளை கடையிலேயே வாங்கிக் கொள்கின்றனர். இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு பல பிராண்டுகள் இனிப்புகளை ஆபர்களில் வழங்கும்.

அதுபோலவே தமிழக அரசின் நிறுவனமான ஆவின் தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சலுகைகளை அறிவித்திருக்கிறது. பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ பாக்ஸ்களாக ஆவின் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அதில் மைசூர்பாகு 250 கிராம் மிக்சர் 200 கிராம் ஆவின் குக்கீஸ் 50 கிராம் பத்து ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ ரூபாய் 300க்கு விற்கப்படுகிறது. அதேபோல் நெய் பாதுஷா 250 கிராம் பாதாம் மிக்ஸ் 200 கிராம் குலாப் ஜாமுன் 250 கிராம் மிக்சர் 200 கிராம் பத்து ரூபாய் சாக்லேட் ஆகியவை கொண்ட காம்போவை ரூபாய் 500க்கு விற்பனை செய்கிறது.

அடுத்ததாக காஜூபிஸ்தா ரோல் 750 கிராம் காஜூ கட்லி 750 கிராம் நெய் பாதுஷா 250 கிராம் முந்திரி அல்வா 250 கிராம் ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ பாக்சிற்கு ரூபாய் 900 என்ற சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்து வருகிறது ஆவின் நிறுவனம். இந்த காம்போ ஆபர் ஸ்வீட் பாக்ஸ்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

admin

Recent Posts

ஹார்முஸ் காரணம் இல்லையா?…. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு புதுக் குண்டை தூக்கிப்போட்ட டொனால்ட் ட்ரம்ப்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்…!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், எண்ணெய் விலை உயர்வுக்கு ஹார்முஸ் ஜலசந்தி காரணமல்ல…

5 minutes ago

FLASH NEWS: “5 தொகுதிகள்… ஒரே நாளில் தேர்தல்”….. சூடு பிடிக்கும் தமிழக அரசியல்…. காலையிலேயே தேர்தல் ஆணையம் கொடுத்த அப்டேட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…

9 minutes ago

“அத பண்ணாதீங்க… இப்படி பண்ணி பாருங்க”…. முதல்வர் விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…

13 minutes ago

“வி.எஸ்.பாபுவுக்கு என்னாச்சு..?”….. 1 மாதமாக தொடரும் கமுக்கம்….. வெள்ளை அறிக்கை கேட்டு டாக்டர் கிருஷ்ணசாமி போட்ட குண்டு….!

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…

17 minutes ago

பதவி பறிபோகாதா?.. ஆனால் ‘ஷாக்’ காத்திருக்கு…. அமைச்சரவை மாற்றத்தில் CM விஜயின் மாஸ் மூவ்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…

20 minutes ago