தீபாவளியை முன்னிட்டு ஆவின் வழங்கும் Sweet Combo Offer… என்னென்ன வகைகள் தெரியுமா…?

By Meena on அக்டோபர் 15, 2024

Spread the love

ஒவ்வொரு வருடத்தில் வரும் பண்டிகைகளில் அனைவருக்கும் பொதுவாக பிடித்த பண்டிகை தீபாவளி. தீபாவளி என்றாலே நம் நினைவுக்கு வருவது இனிப்புகள், பட்டாசுகள், புத்தாடைகள் ஆகியவைதான். பாரம்பரிய முறைப்படி பல தாய்மார்கள் வீட்டிலேயே பல வித விதமான பலகாரங்களை செய்வதுண்டு.

   

நம் பாட்டி அம்மா காலத்தில் வீட்டிலேயே முறுக்கு தட்டை அதிரசம் லட்டு ஆகியவற்றை வீட்டிலேயே செய்வார்கள். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு பலகாரம் செய்ய தெரிவதில்லை. அதற்காக தீபாவளியை கொண்டாடாமல் இருக்க முடியுமா? அனைவரும் ரெடிமேடாக இனிப்பு மற்றும் கார வகைகளை கடையிலேயே வாங்கிக் கொள்கின்றனர். இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு பல பிராண்டுகள் இனிப்புகளை ஆபர்களில் வழங்கும்.

   

அதுபோலவே தமிழக அரசின் நிறுவனமான ஆவின் தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சலுகைகளை அறிவித்திருக்கிறது. பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ பாக்ஸ்களாக ஆவின் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

 

அதில் மைசூர்பாகு 250 கிராம் மிக்சர் 200 கிராம் ஆவின் குக்கீஸ் 50 கிராம் பத்து ரூபாய் சாக்லேட் அடங்கிய காம்போ ரூபாய் 300க்கு விற்கப்படுகிறது. அதேபோல் நெய் பாதுஷா 250 கிராம் பாதாம் மிக்ஸ் 200 கிராம் குலாப் ஜாமுன் 250 கிராம் மிக்சர் 200 கிராம் பத்து ரூபாய் சாக்லேட் ஆகியவை கொண்ட காம்போவை ரூபாய் 500க்கு விற்பனை செய்கிறது.

அடுத்ததாக காஜூபிஸ்தா ரோல் 750 கிராம் காஜூ கட்லி 750 கிராம் நெய் பாதுஷா 250 கிராம் முந்திரி அல்வா 250 கிராம் ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ பாக்சிற்கு ரூபாய் 900 என்ற சிறப்பு சலுகைகளுடன் விற்பனை செய்து வருகிறது ஆவின் நிறுவனம். இந்த காம்போ ஆபர் ஸ்வீட் பாக்ஸ்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.