மைசூர் மகாராஜாவால் 106 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது… பாரம்பரியமான Mysore Sandal Soap இன் வரலாறு…

Spread the love

சந்தன நறுமணம் கொண்ட சோப்பு என்றாலே நாம் நினைவுக்கு வருவது மைசூர் சாண்டல் சோப்பு தான். 100% சந்தன எண்ணையால் தயாரிக்கப்படுவது தான் மைசூர் சாண்டல் சோப் ஆகும். இது மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராஜா உடையாரால் தொடங்கப்பட்டது. இந்த மைசூர் சாண்டல் சோப் உருவாக்கப்பட்டதன் பின் இருக்கும் வரலாறு என்ன என்பதை பற்றி காண்போம்.

1916 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள சந்தன மரங்களைக் கொண்டு சந்தன எண்ணெய் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் தான் இது தொடங்கப்பட்டது. ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக ஐரோப்பாவிற்கு சந்தன எண்ணெய்களை ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. உடனே மன்னர் கிருஷ்ணராஜ உடையார் அந்த திட்டத்தை மாற்றி சந்தன பவுடர், சந்தன எண்ணெய் கலவையில் சந்தன சோப்பை உருவாக்க திட்டமிட்டு தொழிற்சாலையை உருவாக்கினார்.

100% சந்தன எண்ணெயால் தயாரிக்கப்பட்ட இந்த மைசூர் சாண்டல் சோப்பிற்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் 1980 ஆம் ஆண்டு இந்த சோப் நிறுவனம் கர்நாடக அரசு கைக்கு மாறி பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்டு கர்நாடகா சோப்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்து வருகின்றது. தற்போது சோப்பு மட்டுமல்லாமல் பவுடர், கிரீம்கள் என பலதரப்பட்ட தயாரிப்புகள் விற்பனையாகி வருகிறது.

மைசூர் சாண்டல் சோப்பிற்கு 2006 ஆம் ஆண்டு உலகிலேயே மிகவும் இயற்கையாக தயாரிக்கப்படும் சோப் என்ற அந்தஸ்துடன் புவிசார் குறியீட்டைப் பெற்றது. இந்தியாவில் மிகப் பிரபலமான அரசு நிறுவனமாக மைசூர் சாண்டல் சோப்பு உள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவராக மகேந்திர சிங் தோனியும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவும் மைசூர் சாண்டல் சோப்பை விரும்பி வாங்கி பயன்படுத்தும் மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.

admin

Recent Posts

“பதவியேற்கும் முன்பே இப்படியா?… வாளால் கேக் வெட்டிய விஜய் தாமு… சர்ச்சையில் சிக்கிய த.வெ.க எம்.எல்.ஏ… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்…

4 minutes ago

BREAKING: விஜய்யின் தவெகவுடன் கூட்டணி… சற்றுமுன் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ஆதரவை அதிரடியாக அறிவித்துள்ளது.…

10 minutes ago

BREAKING: திமுக-வை வீழ்த்த புதிய வியூகம்… விஜய் – எடப்பாடி கூட்டணி உறுதி?… புஸ்ஸி ஆனந்திடம் எடப்பாடி பேசியது என்ன..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத பரபரப்பை…

14 minutes ago

“விஜய் அரசியலில் திடீர் ட்விஸ்ட்… த.வெ.க – NDA கூட்டணியா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த தளபதி விஜய்”…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

17 minutes ago

“12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்”….. மே 8-ல் ரிசல்ட் வராது?… பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்ட செய்தி….!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்று மாணவர்கள்…

22 minutes ago

“ஒரே கார்.. மூன்று மாஜிக்கள்”… உடையப் போகுது அதிமுக?…. அதிர்ச்சியில் எடப்பாடி… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கிய அதிமுக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பிறகு தொடர்ச்சியான உட்கட்சிப் பூசல்களைச் சந்தித்து…

29 minutes ago