BREAKING: தேசியக்கொடியுடன் களமிறங்கிய CJP தலைவர்…. நடுவழியில் தடுத்து நிறுத்தி அதிரடி கைது…. சற்றுமுன் பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 16, 2026

Spread the love

தேசியக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடச் சென்ற சி.ஜே.பி (CJP) தலைவர் அபிஜித் திப்கேவை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். முன்னதாக, இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று அவருக்குக் காவல்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையிலும், அதைப்பொருட்படுத்தாமல் அவர் போராட்டக் களத்தை நோக்கிப் புறப்பட்டதால், வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, போராட்டத்தின் முக்கிய இடமான சென்ட்ரல் பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரளத் தொடங்கியுள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.