மலையாலய மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித் குமாரின் மகன் ஆத்விக் அஜித் குமார், மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் (Sepang International Circuit) தனது தந்தையின் ரசிகர்களுக்கு முன்னால் உற்சாகமாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aadvik #AjithKumar dancing the Viral Indonesia boat dance in front of his dad’s fans at the Sepang International Circuit. Such a cute video ❤️#AjithKumarRacing
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) December 19, 2025
2025-ம் ஆண்டுக்கான ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வரும் தனது தந்தையை ஊக்கப்படுத்த ஆத்விக் அங்கு சென்றிருந்தார். அப்போது, சமீபத்தில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்தோனேசியாவின் புகழ்பெற்ற ‘படகு நடனத்தை’ (Boat Dance) அவர் ஆடிக்காட்டினார். அங்கிருந்த அஜித் குமார் ரசிகர்கள் இதனை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
