“ரவி கொடுக்கும் காசில் ஜாலியாக இருக்கியா…?” நெட்டிசனின் அசிங்கமான கமெண்ட்டிற்கு ஆர்த்தி ரவி கொடுத்த சாட்டையடி பதிலடி…!!

By Devi Ramu on ஐப்பசி 3, 2026

Spread the love

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி, சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றி அவதூறாகக் கருத்துத் தெரிவித்த ரசிகர் ஒருவருக்குக் கொடுத்த சாட்டையடி பதிலடி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், ஆர்த்தி தனது மகன்களை கவனித்துக் கொண்டு சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இக்கட்டான காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த மருத்துவருக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவின் கீழ் நெட்டிசன் ஒருவர், “உனக்கெல்லாம் வேலை இருக்கா இல்ல ரவி கொடுக்கும் பேமென்ட்டை வச்சு ஜாலியா இருக்கியா?” என ஒருமையில் அசிங்கமாகக் கமெண்ட் செய்திருந்தார்.

   

இதைக் கண்டு கொந்தளித்த ஆர்த்தி, “கொடுத்தால் ஜாலியாக இருக்கலாம், ஆனால் அவர் சொந்த மகன்களுக்கே கொடுக்கவில்லை. இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்துவிட்டதாக நம்புகிறேன்” என காரசாரமாகப் பதிலளித்தார். ஜீவனாம்ச வழக்குகளுக்கு மத்தியில், ரவி மோகன் மீது ஆர்த்தி வைத்துள்ள இந்த பகிரங்கக் குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.