ஆர்த்தி ரவியின் கேள்வியால் ஆடிப்போன கோலிவுட்…! பெண்களின் மரியாதை பற்றி அதிரடி போஸ்ட்…. யாரைக் குறிப்பிடுகிறார்…?

By Devi Ramu on பங்குனி 26, 2026

Spread the love

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து விவகாரம் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரவி மோகன் கோவாவில் சொத்து வாங்கியபோது தன்னை “திருமணம் ஆகாதவர்” என்று குறிப்பிட்டதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஒரு மனைவியின் மரியாதை என்பது அந்த கணவரின் சமூக அந்தஸ்து அல்லது ‘மார்க்கெட் வேல்யூ’வைப் பொறுத்து இருக்கக் கூடாது என்றும், பெண்கள் சந்திக்கும் அவமானங்களை யாரும் உணர்ச்சிப்பூர்வமாகக் கவனிப்பதில்லை என்றும் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ரவி மோகன் விவாகரத்தை அறிவித்தபோது தனக்கு கிடைக்காத ஆதரவு, தற்போது மற்ற பெரிய இடத்து விவகாரங்களில் (விஜய்-சங்கீதா போல) ஒரு தரப்புக்கு மட்டும் கிடைப்பது ஏன் என்று அவர் மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சாதாரண இடத்தில் இருக்கும் பெண்களின் குரல் ஒடுக்கப்படுவதையும், செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுதாபம் கிடைப்பதையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். எந்தவொரு மனைவியும் இத்தகைய பொதுவெளி அவமானங்களைத் தாங்க வேண்டிய நிலை வரக்கூடாது என்று பதிவிட்டுள்ள அவர், தனிப்பட்ட பிரச்சனையைத் தாண்டி பெண்களின் கண்ணியம் குறித்த சமூக விவாதத்தைத் தூண்டியுள்ளார்.