“என் லைஃப்ல வந்த ஒருத்தன்”….. ஆஸ்கர் அவார்டு போஸ்ட் மூலம் வெடித்த ஆர்த்தி… இணையத்தில் வைரலாகும் காரசாரமான போஸ்ட்….!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவியான ஆர்த்தியை விட்டு பிரிய உள்ளதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2009-ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்த இந்த தம்பதிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகால தம்பதிய வாழ்க்கைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. அதைத்தொடர்ந்து, இருவரும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் செய்தியாளர்கள் சந்திப்பு மூலமாகவும் தெரிவித்த பல்வேறு கருத்துகள் தொடர்ந்து விவாதப் பொருளாக உருவெடுத்து வந்தன.

இந்நிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு விசித்திரமான பதிவு இணையத்தில் மீண்டும் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தனது பதிவில் அவர், “சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே… அந்த நடிப்புக்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்” என்று மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வினோதமான மற்றும் காட்டமான பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி, ரசிகர்களிடையே பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.

   

ஆர்த்தியின் இந்த இன்ஸ்டா ஸ்டோரி வெளியானதைத் தொடர்ந்து, நெட்டிசன்களும் திரை ஆர்வலர்களும் தங்களது கருத்துகளைத் தீவிரமாகப் பதிவிட்டு வருகின்றனர். ஆர்த்தி மறைமுகமாகக் குறிப்பிடும் அந்த நபர் வேறு யாரும் இல்லை, தனது கணவர் ஜெயம் ரவியைத்தான் (ரவி மோகன்) இவ்வாறு சாடியுள்ளார் என்று பலரும் பலவாறு விவாதித்து வருகின்றனர். பிரிவுக்குப் பின்னரும் இவர்களுக்கிடையேயான இந்த மறைமுக மோதல் மற்றும் சமூக வலைதளப் பதிவுகள், கோலிவுட் வட்டாரத்தில் மீண்டும் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது.