பருத்திவீரன் படத்தை தயாரித்த வகையில் இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. விரைவில் இந்த பிரச்னையை சுமூகமான முடிவுக்கு கொண்டு வர சிவக்குமார் குடும்பம் திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியானது. இதற்கிடையே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்க கூடாது என்ற வகையில் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனத்தை சேர்ந்த தயாரிப்பாளர் தனஞ்செயன் என்பவர், இந்த பிரச்னையில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து இயக்குநர் அமீர் இன்று மாலை ஒரு பதிவை வெளியிட்டு தனஞ்சயெனை எச்சரித்துள்ளார்.

#image_title
நான் பருத்திவீரன் பிரச்னை குறித்து பேசக்கூடாது என நினைத்தாலும் யாரேனும் என்னை பேச வைத்துவிடுகின்றனர். பருத்திவீரன் பிரச்னையில் தனஞ்செயன் தலையீடு செய்து வருகிறார் என்ற தகவல் எனக்கு வந்துக்கொண்டே இருக்கிறது. இயக்குநர் சசிக்குமார், தினகரன் ஜெய், கரு பழனியப்பன், பத்திரிகையாளர் பிஸ்மி, வெற்றிமாறன், அம்மா கிரியேசன் சிவா, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போன்றவர்களை அவர் சந்தித்து, பருத்திவீரன் பிரச்னை குறித்து பேசி இருக்கிறார்.

#image_title
பருத்திவீரன் பஞ்சாயத்து குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என்று நினைத்தாலும் என்னை பேச வைக்கிறார். என் பொறுமையை சோதிக்கிறார். என் வாழ்க்கையில், என் உரிமைகளில் தயவு செய்து விளையாடாதீர்கள். என் விஷயங்களில் தலையிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். என் பிரச்னையை திசை திருப்ப முயற்சிக்காதீர்கள். நான் இயக்குநர் சங்க செயலாளராக இருந்த போது தாண்டவம் பட பிரச்னைக்காகவும், இயக்குநர்கள் பற்றி தவறான கட்டுரை எழுதியதற்காகவும் தனஞ்சயென் மன்னிப்பு கடிதம் எழுதினார். அந்த காழ்ப்புணர்ச்சிக்காக என் பிரச்னையில் தலையிடுவதை விட்டு, இத்துடன் விலகிக் கொள்ளுங்கள் என எச்சரிக்கிறேன், என்று அதில் அமீர் தெரிவித்துள்ளார்.
