Connect with us

என்னது…! அமீர்கான் சென்னையில் குடியேற போறாரா?…. அதுக்கு இதுதான் காரணமா?…. தீயாய் பரவும் தகவல்…!!!

CINEMA

என்னது…! அமீர்கான் சென்னையில் குடியேற போறாரா?…. அதுக்கு இதுதான் காரணமா?…. தீயாய் பரவும் தகவல்…!!!

 

நடிகர் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடித்த பல திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திருக்கின்றார்.

   

புதிய படங்களுக்கான எந்த கதையையும் தற்போது அவர் கேட்டு வருவதில்லை. அது மட்டும் இல்லாமல் மும்பையில் இருந்து சென்னைக்கு தற்காலிகமாக இடம் பெயர இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதற்கு காரணம் அவரது தாயார் ஜுனத் ஹுசைன் தான். கடந்த ஆண்டு ஜூனத் ஹுசைனுக்கு மார்வடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சையும் மேற்கொண்டு வீடு திரும்பினார்.

அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்வதற்கு முடிவு செய்துள்ளார்கள். தாயாரை தனது அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மருத்துவமனை அருகிலேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அங்கு சில மாதங்கள் தங்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

அமீர்கான் இந்த சிகிச்சை நடைமுறைகள் முடிந்த பிறகு சீதரே ஜமீன் பர் என்ற படத்தை தயாரித்து நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2007 ஆம் ஆண்டு தாரே  ஜமீன் பர் படத்தில் அமீர்கான் இயக்கி நடித்து இருக்கிறார். இப்போது தயாராகும் இந்த திரைப்படம் காமெடி கலாட்டாவாக இருக்கும் என கூறப்படுகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top