வெளிய 27 MLA -வை வெயிட் பண்ண வச்சிட்டு எங்க 3 பேரு கிட்டயும்… விஜயகாந்துடன் இருந்த நினைவுகளை பகிர்ந்து இயக்குனர் சேரன் உருக்கம்..

By Sumathi

Updated on:

விஜயகாந்த் அறையில் கேப்டன் அமர்ந்திருக்க அவர் எதிரில் விஜய், சேரன், அமீர் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். விஜயகாந்த் மறைவின் போது அந்த புகைப்படத்தை பதிவிட்ட சேரன், அந்த பதிவில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

திரைத்துறையில் வெற்றி இருந்தால் முதலிடம். இல்லையேல் கடைசி இடம் கூட நிரந்தரம் இல்லை. கேப்டனுடன் தம்பி விஜய், நான், அமீர் மற்றும் வெங்கட் சார் மூன்று பேரின் வெற்றி உயரங்கள் அந்த நேரத்தில் வெவ்வேறானவை. கேப்டன் மூவரிடமும் பழகிய விதம் சமமாக. அதுவே இறுதி ஊர்வல காட்சிகளின் காரணம் என பதிவிட்டு இருக்கிறார் இயக்குநர் சேரன்.

   

அதே விஷயத்தை அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசுகையில், 27 எம்எல்ஏக்கள் மண்டபத்தில் காத்திருக்காங்க. நடிகர் விஜய் வெளியில வந்திருக்காரு. அவர் பொக்கேவோட வாழ்த்துச் சொல்ல வெளிய காத்திட்டு இருக்காரு. கேப்டனுக்கு சின்ன ஆளு, பெரிய ஆளுங்கற வித்யாசமே இல்ல. யோவ் நம்ம புள்ளதானய்யா, வரச்சொல்லுய்யா விஜயை அப்படீன்னு சொல்றாரு. அப்போ விஜய் உள்ளே வந்துட்டார். நானும், அங்கிருந்த சேரனும் கிளம்பறோமுன்னு சொல்றோம்.


அட இருங்கய்யா அப்படின்னு சொல்லிட்டு 3 பேரையும் உட்கார வைச்சு பேசீட்டு இருக்கார். அப்போது திரைத்துறைக்கு ஏதாவது பண்ணனும் என்று பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போது விஜய் கொஞ்ச நேரம் பேசிட்டு கிளம்பி போயிட்டார். நாங்க கிளம்பறோம் என்று சொன்னால், உட்காருங்க, உட்காருங்க என்று சொல்லிக்கிட்டே இருக்கிறார். அண்ணே அங்கே 27 எம்எல்ஏக்கள் வெயிட் பண்ணீட்டு இருக்காங்கன்னு சொல்றாங்க. இருய்யா, அப்புறம் அவங்களை பார்த்து பேசிக்கிறேன் என்றார்.

அப்படி நேற்று ஒரு மாதிரி இருந்தார், இப்ப ஒரு மாதிரி இருக்கார் என்று சொல்லவே முடியாத ஒரு நிலையில் அவர் இருந்தார், என்று அதில் கூறியிருக்கிறார் அமீர். அதாவது விஜய், அமீர், சேரன் ஆகியோர் புகழில் வெவ்வேறு இடங்களில் இருந்தனர். அவர்களை விட விஜயகாந்த் உச்சத்தில் இருந்தார். ஆனால் யாரிடமும் பாகுபாடின்றி அவர்களையும் சமமாக நடத்தியவர் கேப்டன் என உணர்வுபூர்வமாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.

author avatar
Sumathi