Connect with us

கமலை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் படம் எடுத்த தயாரிப்பாளர்.. கடைசியில் 20 கோடி நஷ்டத்தில் முடிந்த அவலம்..

Actor Kamal Haasan

TRENDING

கமலை வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் படம் எடுத்த தயாரிப்பாளர்.. கடைசியில் 20 கோடி நஷ்டத்தில் முடிந்த அவலம்..

 

நடிகர் கமல்ஹாசன் படங்கள் என்றாலே அது வித்யாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும். தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமான படங்களில் கமல்ஹாசன் நடிப்பது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 2001ம் ஆண்டில் அப்படி வெளிவந்த ஒருபடம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் என்ற கேரக்டரில் மிலிட்டரி ஆபிசராகவும், நந்து என்ற மனநலம் பாதித்த ஒரு சைக்கோ வில்லன் கேரக்டரிலும் அண்ணன், தம்பியாக கமல்ஹாசன் நடித்திருந்தார். கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான் என்று கமல் பாடிய பாடல் இன்று ரசிக்கும்படியாக இருக்கிறது.

   

கடந்த 2001ம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். ஆனால் படம் பிளாப் ஆனது. இதனால், 20 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டது. 22 ஆண்டுகளுக்கு முன் 20 கோடி ரூபாய் நஷ்டம் என்பது அன்றைய காலகட்டத்தில் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய இழப்பை கொடுத்தது. இந்த சூழலில், இந்த படத்தை சமீபத்தில் ரி- ரிலீஸ் செய்திருக்கிறார் கலைப்புலி தாணு. ஜெயிலர், லியோ போன்ற ஆக்சன் படங்கள், கான்ட்ரவர்சியான படங்களை இப்போதைய ரசிகர்கள் வெகுவாக ரசிக்கின்றனர் என்பதால், ஆளவந்தான் படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ளார் தாணு.

இத்தனை ஆண்டுகளாக அமைதியாக இருந்த தயாரிப்பாளர் தாணு, இன்றைய ரசிகர்களின் மனநிலையை பார்த்து, ஆளவந்தான் படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அப்போது ஆளவந்தான் படம் 3 மணி நேரம் ஓடக்கூடிய பிக்சர் பிலிம் படமாக இருந்தது. அதை டிஜிட்டல் மயமாக்கி தேவையற்ற காட்சிகளை நீக்கி இரண்டரை மணி நேர படமாக டிரிம் செய்து, ரசிகர்களுக்கு இப்போது தந்திருக்கிறார். இப்போது அந்த படத்தை பார்த்த இந்த தலைமுறைக்கு அந்த படம் பிடித்திருந்தது.அதனால் பலரும் ஆளவந்தான் படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.

இப்படி ஒரு காலகட்டத்தில் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு படம், மீண்டும் ஒரு காலகட்டத்தில் அதே படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்றால், ஒரு தலைமுறையால் மறுக்கப்பட்ட படம், அடுத்த தலைமுறையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதுதான் உண்மை. எனினும் 22 ஆண்டுகளுக்கு முன் 20 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கிய தயாரிப்பாளர் ஆளவந்தான் ரி ரிலீஸ் மூலம் சில கோடிகளை திரும்ப பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
Sumathi
Continue Reading
To Top