தவெக – அதிமுக இடையே புதிய திருப்பம்….. ஆதவ் அர்ஜுனா விவாகரத்தால் மாறிய மாமியாரின் திட்டம்…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on கார்த்திகை 16, 2026

Spread the love

தமிழக அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மூத்த தலைவருமான ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவி டெய்சி மார்ட்டினும் தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டினின் மகளான டெய்சி மார்ட்டின், தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 14 ஆண்டுகளாக நண்பர்களாகவும், வாழ்க்கைத் துணைகளாகவும் பயணித்த தாங்கள், தற்போது இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குழந்தையின் எதிர்காலமும் மகிழ்ச்சியுமே தங்களுக்கு முக்கியம் எனத் தெரிவித்துள்ள அவர், ஆதவ் அர்ஜுனாவின் எதிர்கால முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் இவர்கள் எடுத்துள்ள இந்த முடிவு, தற்போது தமிழக அரசியலிலும் முக்கிய விவாதங்களைத் தொடங்கியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில், மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி, வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா தற்போது தமிழக அமைச்சராக உள்ளார்; அவரது மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் லால்குடி தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ-வாகவும், மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் பதவி வகித்து வருகின்றனர்.

   

ஆளுங்கட்சியான தவெக-வில் ஆதவ் அர்ஜுனா முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக உருவெடுத்ததைத் தொடர்ந்து, அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் லீமா ரோஸ் மார்ட்டின் விரைவில் அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. மருமகன் ஆளுங்கட்சியில் இருப்பதால், அவருடன் இணைந்து செயல்படுவது தனது அரசியல் எதிர்காலத்திற்குச் சாதகமாக இருக்கும் என அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மகள் டெய்சியும், மருமகன் ஆதவ் அர்ஜுனாவும் அதிகாரப்பூர்வமாகப் பிரிந்துவிட்ட நிலையில், லீமா ரோஸ் மார்ட்டினின் அந்த அரசியல் திட்டம் மாறும் சூழல் உருவாகியுள்ளது.

   

ஏற்கனவே 2025-ம் ஆண்டு ஆதவ் அர்ஜுனா தவெக-வில் இணைந்தபோதே, அவரது அரசியல் செயல்பாடுகளுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என டெய்சி மார்ட்டின் அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த விவாகரத்து அறிவிப்பின் மூலம் இரு தரப்பிற்கும் இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், கட்சி மாறும் எண்ணத்தை லீமா ரோஸ் மார்ட்டின் கைவிட்டுவிட்டு தொடர்ந்து அதிமுகவிலேயே நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, தனது முன்னாள் மருமகன் அங்கம் வகிக்கும் தவெக அரசுக்கு எதிராக அவர் குரல் கொடுக்கும் சூழல் உருவாகியுள்ளது தமிழக அரசியலில் புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.