தமிழகத்தில் ஒப்பந்ததாரர்கள் தங்களது பணி தொகையில் 20% வரை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாகவும், கட்சி நிதியாகவும் கொடுத்து வந்த நிலை இனி தேவையில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். இன்று (ஜூன் 4) நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், புதிய மாற்றத்திற்கான இந்த அதிரடி முடிவை அறிவித்தார். இதன் மூலம் ஒப்பந்தப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்யவும் அரசு தீவிரமாக உள்ளதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஒப்பந்ததாரர்களை யாராவது லஞ்சம் கேட்டு அச்சுறுத்தினால் பயப்படாமல் உடனடியாக புகார் அளிக்கலாம் என்றும் அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இதற்காக விரைவில் பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண் (Toll-Free Number) ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சப் புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
