ஆதவ் அர்ஜுனாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரி, வழக்கறிஞர்கள் முத்துக்குமார் மற்றும் நீலமேகம் ஆகியோர் மதுரை மண்டல அமலாக்கத்துறை (ED) அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். முறைகேடு வழக்கில் அவருக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் எவ்விதத் தாக்கமும் இன்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதற்கு ஏதுவாக அவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்க முதலமைச்சர் விஜய்க்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் அந்த புகாரில் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
