ஷாக்… மதிமுக 2.0 … வைகோதான் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர்?… தவெக மேடையில் அதிரடி கிளப்பிய ஆதவ் அர்ஜுனா…!

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

தாராபுரத்தில் நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “மதிமுக 2.0-வை துரை வைகோ அவர்கள் மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 1990களில் மதிமுக எந்த அளவுக்கு வலுவான இயக்கமாக இருந்ததோ, அதேபோன்று தற்போதும் அது மிக வீரியத்துடன் மீண்டெழுந்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வைகோ அவர்கள் மீண்டும் சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைக்க வேண்டும், அவர் எதிர்க்கட்சித் தலைவராக அமர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அடுத்தபடியாகப் பேசிய தவெகவின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், “நான் முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது எனக்குத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் வைகோ அவர்கள் தான். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 2 மதிமுக எம்.எல்.ஏக்களும் அங்குச் சென்றுவிட்டார்களே என்று மதிமுக தோழர்கள் யாரும் வருத்தப்படத் தேவையில்லை. தற்போது தவெக கூட்டணியில் உள்ள நமது 107 எம்.எல்.ஏக்களுமே மதிமுகவின் எம்.எல்.ஏக்கள் தான்” என்று உற்சாகமாகப் பேசினார்.

   

மேலும் பேசிய அவர், “துரை வைகோ அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்று இங்குச் சிலர் பேசினார்கள். ஆனால், அவர் எதிர்க்கட்சித் தலைவராக அல்லாமல், அமையவுள்ள புதிய அரசில் ஆளுங்கட்சியின் முக்கியப் பொறுப்பிலேயே இடம் பெறுவார்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.