ஜூலை-1 முதல் ரயிலில் தட்கல் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்… புதிய கட்டுப்பாடு விதித்த இந்தியன் ரயில்வே …!!

By Soundarya on ஆனி 11, 2025

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக தேவைப்படுவதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து தகவல்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஏனெனில் ஆதார்  என்பது எங்கு போனாலும் மிக முக்கியமான ஒரு ஆவணமாகவே தேவைப்படுகிறது.

இந்நிலையில் ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 1 ஜூலை ஆம் தேதி முதல் IRCTC இல் ஆதார் எண்ணை பயன்படுத்தி VERIFY செய்யப்பட்ட கணக்குகளில் மட்டுமே தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று புதிய கட்டுப்பாடு இந்தியன் ரயில்வே விதித்துள்ளது. மேலும் தட்கல் சேவையின் பயன் பொதுமக்களுக்கும் முழுமையாக சென்று சேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.