இந்தியாவைப் பொறுத்தவரையில் மற்ற போக்குவரத்து பயணங்களுடன் ஒப்பிடும்போது ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளது. சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர் id உள்ளவர்களுக்கு மட்டுமே ஐ ஆர் சி டி சி வெப், ஆப்பில் முன்பதிவு செய்ய முடியும். தற்போது அறுபது நாட்களுக்கு முன்பு சாதாரண டிக்கெட் முன்பதிவு ஓபன் ஆகிறது.
