Wow…! பிறந்த குழந்தைகளுக்கு உடனே ஆதார் அட்டை…. அரசு மருத்துவமனையின் புதிய முயற்சி…!!

By Devi Ramu on கார்த்திகை 3, 2025

Spread the love

பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு மருத்துவமனைகள் செயல்படுத்தி வருகிறது. முதல் முறையாக ஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் ரயில்வே மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் பிறந்த 4 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டையும் பிறப்பு சான்றிதழும் கொடுக்கப்பட்டது.

சக்ரதார்பூர் மண்டல ரயில்வே மேலாளர், மாவட்ட நிர்வாகம், ஊழியர் நிர்வாக அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த நடைமுறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே மண்டலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.