அட்லீயின் அடுத்த படம் குறித்து அவரே கொடுத்த அப்டேட்.. ஹீரோ இவர் தானா..?

By Nanthini on மார்கழி 18, 2024

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதல் படமே இவருக்கு மிக சிறப்பான வரவேற்பை பெற்று தந்த நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களை விஜயுடன் இணைந்து இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இதனை தொடர்ந்து இவருடைய மார்க்கெட் வேல்யூ எகிரிய நிலையில் தன்னுடைய ஐந்தாவது படமாக ஷாருக்கான் உடன் ஜவான் திரைப்படத்தில் இணைந்திருந்தார். அந்த திரைப்படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

இந்த பட்ஜெட்ல ஒரு படமே எடுத்துடலாம்!.. சம்பளத்தை பல கோடி ஏத்தி தயாரிப்பாளர்களை அலறவிடும் அட்லீ!...

   

இந்த நிலையில் அட்லியின் ஆறாவது படத்தில் சல்மான் கான் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்படியான நிலையில் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் என்ற படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் அட்லி மற்றும் வருண் தவான் ஆகிய பட குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் அட்லி அளித்த பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

   

Jawan Director Atlee, Salman Khan To Collab For A Mega Action-Thriller, Film To Feature Top South Superstar: Report | Times Now

 

அதில் தன்னுடைய A6 படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுள்ளார். விரைவில் ரசிகர்கள் அனைவருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. இந்தப் படத்திற்கு அதிகமான காலம் தேவைப்பட்டதாகவும் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்த படம் சர்வதேச அளவில் மிகப் பெரிய கொண்டாட்டமாக அமையும் என்று தெரிவித்துள்ள அவர், படத்தின் நடிகர்கள் குறித்து பல்வேறு யூகங்கள் உள்ள நிலையில் அதை மீறி ரசிகர்களை தான் சர்ப்ரைஸ்  செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

என்னோட அடுத்த ஹீரோ விஜய் சேதுபதி தான்.. மேடையிலேயே அப்டேட் கொடுத்த அட்லி - Cinemapettai

இந்த படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து தான் படம் தயாரிக்க உள்ளதாக அட்லி கூறி உள்ளார். இந்த படத்திற்கான வேலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் பேபி ஜான் திரைப்படம் இன்னும் சில நாட்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் அடுத்த தயாரிப்பு குறித்து அட்லி பேசியுள்ளார். இந்தப் படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்க உள்ள நிலையில் அட்லி தயாரிக்கிறார்.