“தாங்க முடியாத அவமானம்”… 15 வருட குடும்ப வாழ்க்கை ஒரு ஆடியோவால் முடிவுக்கு வந்த சோகம்… இளம்பெண்ணின் விபரீத முடிவு…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

திருமணமாகி 15 ஆண்டுகளும் இரண்டு குழந்தைகளும் உள்ள மம்தா என்ற பெண்ணின் வாழ்வில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. பழக்கடையில் கூலி வேலை பார்க்கும் கணவருடன் வாழ்ந்து வந்த அவர், அண்டை வீட்டுக்காரரின் உறவினரான சுரேந்திர யாதவ் என்பவருடன் போனில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் துளியும் விரும்பாத மம்தாவின் நாத்தனார், அந்த உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்து வைத்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் விசாரித்தபோது, தான் அப்படிப் பேசவில்லை என மம்தா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மம்தாவின் மறுப்பால் ஆத்திரமடைந்த அவரது நாத்தனார், அந்த ஆடியோ பதிவை வீட்டின் வெளியே பெரிய ஸ்பீக்கரில் வைத்து ஊரார் கேட்கும்படி செய்துள்ளார். மேலும், இந்தச் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களிலும், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மத்தியிலும் வேகமாகப் பரவியது. இதனால் ஏற்பட்ட பொது அவமானத்தைத் தாங்க முடியாத மம்தா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி எலி மருந்து குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.