“ஒரு எழுத்து… தலையெழுதவே மாத்துது…” இளம் பெண்ணின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக முடக்கிய அரசு இயந்திரம்… எங்க போயியும் பண்ண முடில… கதறும் பெண்… அலட்சியத்தால் வந்த வினை…!

By Visaka on ஆடி 26, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியைச் சேர்ந்த 24 வயது பாத்திமா என்ற இளம் பெண், தனது அடையாள அட்டையில் ஏற்பட்ட ஒரு சிறிய தொழில்நுட்பத் தவாரால் கடந்த பல ஆண்டுகளாக கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு தனது பிறந்த தேதியைத் திருத்தம் செய்யச் சென்றபோது, அந்த மையத்தின் ஆபரேட்டர் தவறுதலாக அவரது பாலினப் பிரிவில் “ஆண்” என்று குறிப்பிட்டுவிட்டார். இதனால் கிராம மட்டம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் மற்றும் டெல்லி வரை உள்ள பல்வேறு அலுவலகங்களுக்குச் சென்று பாத்திமா முறையிட்டும், இந்தத் பிழையைத் திருத்த ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்ற தன்னிச்சையான விதியைக் காரணம் காட்டி அதிகாரிகள் அவரது கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.

https://twitter.com/hindipatrakar/status/2080969780505514083/photo/1

   

முறையற்ற அரசாங்க ஆவணங்களால் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவரது ஒட்டுமொத்த எதிர்காலமும் ஸ்தம்பித்துப் போய் முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுக்கு பொதுமக்கள் பொறுப்பேற்க முடியாது என்ற அடிப்படை நியாயம்கூட மறுக்கப்படும் இந்த அவல நிலை, சாமானிய மக்களின் வாழ்வை அதிகார வர்க்கம் எந்தளவுக்கு முடக்குகிறது என்பதற்குச் சான்றாகும். பிழையைத் திருத்தக் கோரி தொடர்ந்து போராடி வரும் பாத்திமாவுக்கு நீதி கிடைக்குமா என்ற கேள்விக்குரிய சூழலில், இது போன்ற குளறுபடிகளைத் தவிர்க்க அரசு உடனடியாக சிறப்புத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.