“முன்னாள் கல்லூரி நண்பன்…” அடுத்தடுத்து வந்த போட்டோ வீடியோ…. பிளாக்மெயில் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

By Devi Ramu on ஆவணி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த வாணி (22) என்ற இளம் பெண், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது முன்னாள் கல்லூரி நண்பனான அபிஷேக் என்பவர், வாட்ஸ்அப் மூலம் வாணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்துத் தொடர் பிளாக்மெயில் மற்றும் மன உளைச்சலை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் வாணி இந்த முடிவை எடுத்துள்ளார். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அபிஷேக்கைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.