பெங்களூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ரெடிட் தளத்தில் தனது வாழ்க்கையின் சோகத்தை பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு அந்த வாலிபருக்கு பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அது நான்காவது நிலையில் இருந்ததால் அவரது உடல் நலம் மோசமானது. பல மாதங்களாக கிமோதெரபி உட்பட எல்லா சிகிச்சைகளையும் அந்த வாலிபர் எடுத்து வருகிறார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை.
மருத்துவர்களும் கைவிட்டதாக தெரிகிறது. இதனால் இந்த ஆண்டிற்கு பிறகு தான் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும், இதுதான் தனக்கு கடைசி தீபாவளி எனவும் வாலிபர் பதிவிட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பயணம், தொழில், நாய் தத்தெடுத்தல் போன்ற நிறைவேறாத கனவுகளும், பெற்றோரின் சோகமும் தன்னை வாட்டுவதாக வாலிபர் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
