கடவுளே… கல்யாணமான சில வாரத்துல இப்படியா ஆகணும்?… அமெரிக்காவில் சோகமாக முடிந்த… இளைஞரின் வாழ்க்கை… நெஞ்சை பதபதக்க வைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 18, 2026

Spread the love

அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள லோவெல் நகரில் செப்டம்பர் 14 அன்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். 2021-இல் அமெரிக்கா சென்று சிவில் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற இவர், அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்து தனது வாழ்க்கையைத் தொடங்கி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் டெக்சாஸில் இவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், சில வாரங்களிலேயே நிகழ்ந்த இந்த சோகமான சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரிலும் ஆழ்த்தியுள்ளது.

   

https://twitter.com/YakkatiSowmith/status/2100487755931537878/video/1

   

இளைஞரின் உடலை விரைவில் இந்தியாவுக்குக் கொண்டுவர தேவையான அனைத்து உதவிகளையும் செய்யக் கோரி, அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுத்தீன் ஒவைசி, நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக ஜெனரலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.