யார் சாமி நீ… போலீஸ் தடியடியா?… நோ ப்ராப்ளம்… டெல்லி போராட்ட களத்தில் ட்ரெண்டாகும்… இளைஞரின் விசித்திர தற்காப்பு ட்ரிக்… இணையத்தில் வைரல் வீடியோ…!!

By Swetha on ஆடி 25, 2026

Spread the love

டெல்லியில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் சமீபத்தில் அதிரடி போராட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், காவல்துறையினர் தடியடி நடத்தினால் அதில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு விசித்திரமான மற்றும் வித்தியாசமான யோசனையைக் கையாண்டுள்ளார்.

காவல்துறையின் பலத்த அடிபடுவதில் இருந்து தனது தலையைப் பாதுகாத்துக் கொள்ள அவர் ஹெல்மெட் அணிந்திருந்தார். மேலும், தடியடியின் போது உடலில் காயம் ஏற்படாமல் இருக்க, தனது ஆடைகளுக்குள் ஆங்காங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தயார் நிலையில் வந்துள்ளார். அத்துடன், வன்முறையைத் தவிர்த்து அமைதியை வலியுறுத்துவதற்காகவே தான் கையில் பூங்கொத்துடன் வந்திருப்பதாகவும் அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

   

போலீஸ் தடியடியில் இருந்து தப்பிக்கவும் அதே நேரத்தில் அமைதியை வலியுறுத்தவும் அந்த இளைஞர் கையாண்ட இந்த வித்தியாசமான ஐடியா மற்றும் தற்காப்பு குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.