என்ன ஒரு ஸ்டைல்…! நெல் வயலில் ‘ரேம்ப் வாக்….! பாலிவுட் பிரபலங்களையே திரும்பி பார்க்க வைத்த  வாலிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 9, 2026

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்திலுள்ள அகர்மா கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான நிஷாந்த் கெர்கெட்டா என்ற இளைஞர், வயல்வெளியில் விவசாயம் செய்வதோடு சேர்த்துத் தன்னுடைய அசாத்தியமான மாடலிங் உடைகள் மற்றும் உடலமைப்பைக் காட்டி வெளியிட்ட வீடியோ இணையதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ஆரம்பத்தில் வெறும் ஷார்ட்ஸ் அணிந்து வெறுங்காலுடன் சேற்று வயலில் விதை தூவும் விவசாயியாகத் தோன்றும் அவர், அடுத்த நொடியே ஷார்ப் கோட்-சூட், நவீன உடைகள் மற்றும் கூலிங் கிளாஸுடன் சர்வதேச மாடல்களைப் போல கெத்தாக போஸ் கொடுத்து அசத்துகிறார்.

https://www.instagram.com/reel/DeDhRuZgEzb/?utm_source=ig_web_copy_link&srtk=NTc4MTIwNjQ2YQ==

   

இவரது இந்த ‘டிரான்ஸ்ஃபர்மேஷன்’ வீடியோவை பார்த்த பாலிவுட் பிரபலங்களான பூமி பெட்னேகர், அனுஷா தண்டேகர், ஷிபானி தண்டேகர் உள்ளிட்டோர் அவரது ஆடை வடிவமைப்பு மற்றும் கம்பீரமான தோற்றத்தைப் பாராட்டியுள்ளனர். தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்ப விவசாயத்தைக் கவனித்துக்கொண்டே பட்டப்படிப்பைத் தொடரும் இந்த இளைஞரின் அபார முயற்சியை நெட்டிசன்கள் “அவரா பார்மிங்” (Aura Farming) எனக் கொண்டாடி வருகின்றனர்.