தனக்காக அல்லாமல், வாயில்லா ஜீவன்களுக்காக வீடு வீடாகச் சென்று உணவு சேகரிக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் செயல் சமூக வலைதளங்களில் பலரது இதயங்களை நெகிழ்வித்து வருகிறது. மனிதநேயம் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், இந்த இளைஞன் தினமும் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் உணவு கேட்டுப் பெறுகிறார். ஆனால், அந்த உணவை அவர் தன் பசிக்காகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
खुद के लिए नहीं….बेजुबानों के लिए भीख मांगता है🫡
गांव का यह लड़का घर घर जाकर खाने की भीख मांगता
है लेकिन अपने पेट के लिए नहीं जो भी मिलता है उससेभूखे बेजुबानों का पेट भरता है…👍
आज के समय में जहां लोग इंसानों की मदद नहीं करते वही
यह लड़का इंसानियत का असली मतलब सिखा रहा है… pic.twitter.com/IhzaEXHstg— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) March 11, 2026
மக்களிடம் இருந்து அவர் பெறும் உணவை வைத்து, தெருக்களில் பசியால் வாடும் நாய்கள், பூனைகள் மற்றும் பிற வாயில்லாப் பிராணிகளின் பசியைப் போக்கி வருகிறார். மற்றவர்கள் உதவியின்றி தவிக்கும் இந்த விலங்குகளுக்கு ஒருவேளை உணவாவது கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், கூச்சமின்றி இரந்து உணவு கேட்கும் அவரது இந்தச் செயல், மனிதாபிமானத்தின் உண்மையான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
சொந்த மனிதர்களுக்கே உதவத் தயங்கும் இன்றைய உலகில், ஒரு கிராமத்து இளைஞன் காட்டும் இந்த அளவற்ற கருணை நமக்கெல்லாம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. “நம்மால் முடிந்த அளவு பிற உயிர்களிடத்தில் அன்பையும் கருணையையும் காட்டக்கூடாதா?” என்ற கேள்வியை இந்த இளைஞனின் செயல் நம் முன் வைக்கிறது. இவரைப் போன்றவர்களின் மனிதாபிமானம் தான் இவ்வுலகை இன்னும் அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறது
