இந்தியால போராடுனா வேஸ்ட்… இங்க ஓடுனா மாதம் லட்சங்களில் சம்பளம்… JEE, UPSC-யில் தோற்ற இளைஞர்… அமெரிக்காவில் இருந்து போட்ட வீடியோ… இணையத்தில் வைரல்…!

By Swetha on புரட்டாதி 27, 2026

Spread the love

இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் சவுகான் என்பவர், தனது நண்பர்களைப் பார்த்து ஜே.இ.இ, நீட், யு.பி.எஸ்.சி மற்றும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு ஆயத்தமானார். எனினும், தொடர் தோல்விகள், குடும்பத்தின் நிதிப் நெருக்கடி மற்றும் பெற்றோருக்குப் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆகியவை அவருக்குப் பெருத்த மன உளைச்சலையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தின.

வழக்கமான பாதையிலிருந்து விலகிச் செல்ல முடிவு செய்த அவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பைத் தேர்ந்தெடுத்தார். படிப்பை முடித்த பின் மெர்ரியட் ஹோட்டலில் பேஸ்ட்ரி செஃப்-ஆக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இந்த அனுபவத்தின் மூலம் அவருக்கு அமெரிக்கா சென்று வேலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.

   

https://www.instagram.com/reel/DdtiTFMzXzz/?utm_source=ig_web_button_share_sheet

   

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உழைப்பும் போராட்டமும் இருக்கத்தான் செய்கிறது என்று குறிப்பிட்ட அவர், “நீங்கள் இந்தியாவில் போராடுவதை விட அமெரிக்காவில் கடுமையாக உழைத்தால், உங்களின் உழைப்பிற்கு 1,000 சதவீதம் பலன் நிச்சயம் கிடைக்கும்” என்று தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த அனுபவப் பகிர்வு சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தைப் பெற்று வருகிறது.