பெங்களூரு ஆவலஹள்ளியில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள் உள்ளது. அங்கு கே.ஆர்.டிபென்ஸ் லே-அவுட் அருகே தாய் மற்றும் மகள் இருவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். திடீரென்று வீட்டின் கதவை யாரோ தட்டி உள்ளார்கள். யார் என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது வாலிபர் ஒருவர் நிர்வாணமாக மண்வெட்டியுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த நிர்வாண மனிதன் ஜன்னல் கண்ணாடி மற்றும் கார் , மோட்டார் சைக்கிள் என அனைத்தையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளான். பின்பு கதவையும் உடைக்க முயற்சித்துள்ளான் பீதியில் தாய் மற்றும் மகள் கத்திக் கதறிவுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு சத்தம் கேட்டு வந்து அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் இவருடைய பெயர் ஜெஸ்ஸி என தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவுச்செய்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
