சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் சப்-இன்ஸ்பெக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருக்கு சென்னை நாவலூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் அறிமுகம் ஆனார். இவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சீனிவாசனிடம் இருந்து 18 லட்ச ரூபாய் வரை பணத்தை வாங்கி உள்ளார்.
பின்னர் ஒரு போலியான பணி நியமன ஆணையை சீனிவாசனிடம் கொடுத்துள்ளார். அதனை காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்த போது அது போலியான பணி நியமன ஆணை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று ரஞ்சித் குமாரை கைது செய்தனர். அவரிடம் ரெடிமேடாக பல்வேறு போலியான அரசு வேலைகளுக்கான அரசாணை நகல்கள் இருந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
