உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் அக்டோபர் 23 அன்று அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த 19 வயது மாணவி ஒருவரை, ஃபர்மான் என அடையாளம் காணப்பட்ட நபர் நடுரோட்டில் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி பின்னர் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவியதை அடுத்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பும் கொந்தளிப்பும் நிலவியது. குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
https://twitter.com/IndiaToday/status/2117541715716477362/video/1
இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட ஃபர்மானைக் கைது செய்தனர். மேலும் அவர் மீது பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
