அய்யோ… தாயைக் காப்பாற்ற தினமும் 50 கி.மீ ஓடும் இளைஞர்… 12 ஜோதிர்லிங்கங்களை நோக்கி வியக்க வைக்கும் ஆன்மீகப் பயணம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

Spread the love

பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மோனு மெதுர்பாலா, தனது தாயாரின் தீவிர உடல்நலக் குறைவின் போது அவர் பூரண குணமடைந்தால் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் பாதயாத்திரை செல்வதாக வேண்டிக்கொண்டார். தாயார் நலம் பெற்றதும், தான் அளித்த வாக்கைக் காப்பாற்றும் விதமாக கடந்த மார்ச் 15 அன்று தனது கடினமான பயணத்தைத் தொடங்கினார்.

பேருந்திலோ அல்லது ரயிலிலோ செல்வதற்குப் பதிலாக, நாடு முழுவதும் உள்ள ஜோதிர்லிங்கக் கோயில்களை நோக்கிய தனது நீண்ட ஆன்மீகப் பயணத்தை ஓடிக்கொண்டே கடந்து வருகிறார். தினமும் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் ஓடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர், இதுவரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து பல ஜோதிர்லிங்கங்களைத் தரிசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

https://www.instagram.com/reel/DeraAZIvgG2/?utm_source=ig_web_button_share_sheet

தாயின் மீதான தூய்மையான அன்பிற்கும், நன்றியுணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மோனுவின் இந்தச் சாதனைப் பயணம், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளதுடன், தேசத்தின் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

Swetha

Recent Posts

இப்படியா நடக்கணும்..! பயங்கர வெடிவிபத்து… உயிரிழப்பு அதிகரிக்குமா?… சுரங்கத்தில் 6 பேர் பலி… டீசல் டேங்கர்கள் வெடித்ததால் அதிர்ச்சி…!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அல்லூரி மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மண்டலம், பினகோட்டா அருகே சுரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென…

58 seconds ago

ஸ்ஸப்பா முடியல….. 250% வரி மிரட்டல் மூலம் இந்தியா – பாக். போரை நான்தான் தடுத்தேன்…. மீண்டும் அட்ராசிட்டி செய்யும் டிரம்ப்…..!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசார மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருகிறார். அதன்…

7 minutes ago

சினிமா பாணி கடத்தல்… நடுரோட்டில் மோதிய கார்… பட்டப்பகலில் தூக்கி செல்லப்பட்ட இளைஞர்… கரும்பு தோட்டத்தில் காத்திருந்த கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவாப் கான் என்பவர் பட்டப்பகலில் மர்மக் கும்பலால் கொடூரமாகக் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

19 minutes ago

“என் அம்மாவை விட்ருங்க… கெஞ்சிய மகள்…” காரை ஏற்றி சென்ற மைத்துனர்… சொத்து தகராறில் கொடூரம்… பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் கண்டகல் கிராமத்தில், நீண்ட நாள் சொத்துத் தகராறு காரணமாகப் பெண் ஒருவர் மீது பொலேரோ…

22 minutes ago

கல்லூரியா? சித்திரவதை கூடமா?… மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூரம்… வசவுகளால் தாக்கப்படும் மாணவர்கள்… உச்சக்கட்ட அராஜகம்…!!

ஜலான் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மீது ரேகிங் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக வெளியாகி இருக்கும் காணொளி, ஒட்டுமொத்த கல்விச்…

25 minutes ago

5 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆப்பு?…. திடீரென அறிவாலயத்தில் ஆஜரான ஓபிஎஸ்.. ஸ்டாலின் போட்ட சீக்ரெட் உத்தரவு….!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், திமுக…

34 minutes ago