ஐயோ காப்பாத்துங்க… பட்டாசு பொறி பட்டு நடுரோட்டில்… எரியும் சட்டையோடு ஓடிய வாலிபர்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 11, 2026

Spread the love

மகாராஷ்டிராவின் கிழக்கு கல்யாண் பகுதியில் உள்ள சாய்ராஜ் காலனியில், பட்டாசுப் பொறி பட்டு சச்சின் சிங் என்ற இளைஞரின் சட்டை தீப்பற்றியதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இருசக்கர வாகனத்தில் இருந்து கசிந்த பெட்ரோல் மீது பட்டாசுப் பொறி விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. உடனே அவரது சட்டை முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

நெருப்பு உடம்பில் பரவியதால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், பயந்துபோய் பிரதான சாலையில் அலறியடித்துக் கொண்டு ஓடினார். அப்போது அங்கிருந்த மற்றொரு வாலிபர் மற்றும் பொதுமக்கள், சாதுரியமாகச் செயல்பட்டு எரியும் சட்டையை அவரது உடலில் இருந்து உடனடியாக உருவி எறிந்தனர். இவர்களின் இந்த துரிதமான நடவடிக்கையால் தீ மேற்கொண்டு பரவாமல் தடுக்கப்பட்டு, அவர் பெரும் காயங்களின்றி காப்பாற்றப்பட்டார்.

   

https://twitter.com/nextminutenews7/status/2120045382944342054/video/1

   

இந்த விபத்தில் அவருடன் இருந்த பெண் உறவினர் ஒருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் முழு காட்சியும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் பெரிய அளவில் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லை என்றாலும், தீபாவளி நேரத்தில் பட்டாசுகளைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.