“உன் பொண்டாட்டி எப்படி டா உன் கூட குடும்பம் நடத்துவா”…. ஆத்திரத்தில் பேரன் செய்த கொடூர காரியம்… கலங்க வைக்கும் பின்னணி…!

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவது மனைவி பொன்னம்மாளுடன் (67) காட்டுக்கொட்டை பகுதியில் வசித்து வந்தார். ராமசாமியின் பேத்தி மேகலாவிற்கும், பெருக்கஞ்செடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் திருமணம் நடந்திருந்தது. தொடக்கத்தில் இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், சதீஷ் நாளடைவில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, மேகலாவைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

கணவரின் கொடுமை தாளாமல் மேகலா அவரைப் பிரிந்து தனது தாத்தா ராமசாமியின் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கடந்த ஒரு வருடமாக மேகலா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வரும் நிலையில், சதீஷ் தொடர்ந்து அவரைத் தேடி வந்து தொல்லை கொடுத்துள்ளார். கடந்த 24-ஆம் தேதி ராமசாமியின் வீட்டிற்குச் சென்ற சதீஷ், மேகலாவைப் பற்றி விசாரித்து முதிய தம்பதியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, “குடிபோதையில் வரும் உன்னுடன் என் பேத்தி எப்படி குடும்பம் நடத்துவாள்?” என்று ராமசாமி கண்டித்ததாகத் தெரிகிறது.

இதில் கடும் ஆத்திரமடைந்த சதீஷ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து ராமசாமி மற்றும் பொன்னம்மாள் ஆகிய இருவரின் தலையிலும் அடித்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து வந்த கரியாலூர் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த தம்பதியினர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தலைமறைவான சதீஷைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சேலம், ஆத்தூர், கருமந்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், அவர் தர்மபுரி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சதீஷை சுற்றி வளைத்துக் கைது செய்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், வளர்த்து ஆளாக்கிய தாத்தா, பாட்டியையே அம்மிக்கல்லால் அடித்துக் கொன்ற இந்தத் துயரச் சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பள்ளி அருகே பயங்கரம்… அடுத்தடுத்து வெடித்த சிலிண்டர்கள்… நூலிழையில் தப்பிய மாணவர்கள்… வெளியான திடுக்கிடும் உண்மைகள்…!!

பெங்களூருவின் கக்கடாசபுரா அடுத்த மல்லேஷ்பால்யா பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், புதன்கிழமை காலை சுமார்…

2 minutes ago

“உடலில் துர்நாற்றம் வீசுகிறது…” கர்ப்பிணி பெண்ணுக்கு ஹாஸ்பிடலில் அனுமதி மறுப்பு… நடுரோட்டிலேயே பிரசவம்…. கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டம் ஞான்பூரில் உள்ள பல்வந்த் சிங் அரசு மருத்துவமனையில், சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமை…

2 minutes ago

பட்டப்பகலில் அரங்கேறிய  கொடுமை…! ஓடும் ரயிலில் கைவரிசை காட்டிய வாலிபர்…. மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம்… வைரலாகும் வீடியோ…!!

சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் இயங்கி வரும் புறநகர் ரயிலில், பட்டப்பகலில் பயணியின் கைபேசியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம்…

17 minutes ago

“கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி சித்திரவதை…” முதியவரை அடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கும்பல்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பஞ்சாப் மாநிலம் பாசில்பூர் மாவட்டத்தில் வட்டிப் பணத் தகராறு காரணமாக முதியவர் ஒருவர் கடத்தப்பட்டு, கட்டி வைத்து அடித்து கொடூரமாக…

30 minutes ago

LPU வளாகத்தில் பாதுகாப்பு எங்கே?… “அசால்ட்டா தூக்கிட்டு போய்ட்டாங்க!”… வைரலாகும் ஷாப்பிங் சென்டர் சிசிடிவி வீடியோ…!!

LPU ஷாப்பிங் சென்டரில் அமைந்துள்ள 'O' மொபைல் கடையில் சமீபத்தில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள…

37 minutes ago

“3 பிள்ளைகள் இருந்து என்ன பயன்…?” பள்ளி மதிய உணவை சாப்பிட்டு பசியை போக்கிய தம்பதி… “அதிகாரிகளிடம் கெஞ்சி…” சோகத்தில் உயிரை விட்ட தம்பதி…. வைரலாகும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணேகட் மண்டலத்திற்குட்பட்ட சாப்தா கே கிராமத்தைச் சேர்ந்த முங்கா நர்சாரெட்டி (88) மற்றும் அஞ்சம்மா…

44 minutes ago