வேண்டாம் என தூக்கிஎறிந்த வீடுகளின் மூலம் கோடி கோடியாக சம்பாதிக்கும் ஜப்பானிய இளைஞர்… இது வேற யாருக்கும் தோணாம போச்சே…

By admin on தை 29, 2025

Spread the love

எல்லோருடைய வாழ்விலும் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஒரு சில நேரத்தில் அமையும். அந்த கிடைத்த வாய்ப்பினை புத்திசாலித்தனமாக யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுகிறார்கள். எந்த ஒரு பிசினஸை தொடங்கினாலும் அதில் ஜெயிப்பதற்கு வித்தியாசமான சிந்தனைகளும் விடாமுயற்சியும் தேவை. அப்படி ஒரு வித்தியாசமான ஐடியாவின் மூலம் ஜப்பானை சேர்ந்த இளைஞர் பலரும் கவனிக்காமல் கைவிடப்பட்ட வீடுகளை வைத்து கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். அது எப்படி என்பதை பற்றி இனி காண்போம்.

   

ஓசாகாவை சேர்ந்த 38 வயதான ஹயாடோ கவாமுரா என்பவர் பழைய மற்றும் புறக்கணிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட வீடுகளை வாங்கி அவற்றை வணிக வளாகமாக மாற்றி அதை வாடகைக்கு விட்டு ஏழு கோடிக்கு மேல் சம்பாதித்து இருக்கிறார். சிறுவயதில் இருந்து வீடுகளின் மீது ஆர்வம் கொண்டு இருந்தார் ஹயடோ. கல்லூரியில் படித்த முடித்த பின்பு தனியார் துறையில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து பிசினஸ் செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்தார்.

   

 

பிறகு ரியல் எஸ்டேட் தொழிலை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்தார் ஹயாடோ. சிட்டியை விட்டு தொலைதூரத்திலும் மலை உச்சியில் இருக்கும் பழுதடைந்த கைவிடப்பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து அதன் மேல் பராமரிப்புக்காக சிறு தொகையை மட்டும் செலவிட்டு அதை வாடகைக்கு விட்டு பல கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். இது ஒரு சிறந்த தொழில் என்றும் அவர் பலருக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறார். இந்த ரியல் எஸ்டேட் தொழிலில் சாதிப்பதற்கு உண்மை மற்றும் கவனம் தேவை என்றும் கூறுகிறார் ஹயடோ.