சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் வாலிபர் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எஃப். காலனியைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (25). இவர் பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த நள்ளிரவு 12 மணியளவில் பணி முடிந்ததும், அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை வழியாக நூம்பல் நோக்கித் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அந்தச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததாலும், எந்தவிதமான பாதுகாப்புத் தடுப்புகளோ அல்லது எச்சரிக்கைக் குறியீடுகளோ இல்லாததாலும், வேகமாக வந்த ஹரிபிரசாத் பள்ளம் இருப்பதை அறியாமல் இருசக்கர வாகனத்துடன் நேராக உள்ளே விழுந்துள்ளார்.
அப்போது கட்டுமானப் பணிகளுக்காக நடப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் அவரது தலையில் ஆழமாகக் குத்தியதில், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டுநர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு ஏணி மூலம் பள்ளத்தில் இறங்கி ஹரிபிரசாத்தின் உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் நடந்த இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா நகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசா
