தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (30) என்ற வாலிபர், நீண்ட நாட்களாகியும் தனக்கு திருமணம் கைகூடாத விரக்தியில் செல்போன் கோபுரத்தில் இருந்து குதித்துத் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
தனது தாயுடன் குத்துக்கல்வலசை பகுதியில் வசித்து வந்த இவருக்கு, நிலையான வேலையும் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இலத்தூர் விலக்கு அருகே உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும் செல்போன் டவர் மீது ஏறி அவர் கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த இலத்தூர் காவல்துறையினர், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை இல்லாத நிலையில், தனது ஒரே மகனை இழந்த தாயின் கதறல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயக்குமாரின் தற்கொலைக்குத் திருமணத் தடை மட்டும்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். வாலிபரின் இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
