புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நத்தமாடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரமேஸ்வரி (25) என்பவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன் பிறகு தனது குடும்ப வறுமையின் காரணமாக திண்டுக்கல்லில் உள்ள ஒட்டுப்பட்டி கெயின் ஆப் இண்டஸ்ட்ரியல் என்ற சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் போடி காமன்வாடி பகுதியை சேர்ந்த ஜெயபால் மகேஸ்வரி தம்பதியின் மகன் ஹர்தீப் குமார் அதே நிறுவனத்தில் லிப்டிங் ஆப்ரேட்டராக பல வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறிய நிலையில் இருவரும் காதலித்து வந்தனர்.
இதனிடையே ஹர்தீப் குமாருக்கு ஏற்கனவே அவருடைய உறவுக்கார பெண்ணுடன் திருமணம் நடைபெற்று அந்த பெண் அவருடன் வாழாமல் வேறு திருமணம் செய்து கொண்டு உள்ளதை மறைத்து பரமேஸ்வரி இடம் தன்னுடைய குடும்பம் வசதியான குடும்பம் எனவும் தன்னை திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது என்று ஆசை வார்த்தை கூறி பரமேஸ்வரியை ஏமாற்றியுள்ளார். இதனை நம்பிய பரமேஸ்வரி அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தினரை எதிர்த்து சம்மதம் தெரிவித்தார்.
அப்போது அந்த நபர், எங்கள் வீட்டில் பிரச்சனை அதிகமாக உள்ளதால் நீ கர்ப்பிணி ஆனால் மட்டுமே எங்கள் வீட்டில் ஏதாவது சண்டை போட்டுவிட்டு உன்னை எங்கள் குடும்பத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என ஆசை வார்த்தை கூறி பரமேஸ்வரியை ஏமாற்றி தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார். பிறகு பரமேஸ்வரி கர்ப்பமான நிலையில் ஹர்திக் குமார் அவரை பல காரணங்களை கூறி திருமணம் செய்து கொள்ளாமலும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லாமலும் இருந்துள்ளார். இதனால் பரமேஸ்வரி அதே நிறுவனத்தில் அருகே உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் துறை அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார்.
இருதரப்பையும் அழைத்து விசாரணை செய்து அவரிடம் எழுத்துப்பூர்வமாக அந்த பெண் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான்தான் தந்தை என்று சம்பவ இடத்தில் பரமேஸ்வரிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு தனக்கு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இதனை சரி செய்த பிறகு இரண்டு மாதத்திற்குள் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற உறுதியளித்து வாக்குமூலம் எழுதிக் கொடுத்து அங்கிருந்து ஹர்திக் குமார் சென்று உள்ளார். பிறகு இரண்டு வருடங்கள் ஆகியும் அவர் இதுவரை பரமேஸ்வரியை தொடர்பு கொள்ளாமல் ஏமாற்றி வருகின்றார்.
பரமேஸ்வரி குழந்தையை பெற்றெடுத்த கையோடு காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். ஆனால் அவர்களும் சரியாக விசாரிக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் உடனே விசாரித்து தன் காதலனை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…