மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிவாங்ஷி ரமேஷ்வர் கோலப் என்ற 2 வயது பிஞ்சுக் குழந்தையை, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய் ஒன்று கொடூரமாக கடித்து குதறியது. குழந்தையின் பயங்கர அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அப்பகுதி பொதுமக்கள், நாயை விரட்டிவிட்டுப் படுகாயமடைந்த குழந்தையை மீட்டனர்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிவாங்ஷிக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
