லண்டனின் இல்ஃபோர்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஜன்னல் வழியாக வெளியே வந்த சிறுமி ஒருவர், நிலைதடுமாறி மிக ஆபத்தான முறையில் கீழே தொங்கிக் கொண்டிருந்த நெஞ்சை அதிரவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தள ஜன்னல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு அச்சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும் பதற்றமும் அடைந்தனர்.
சிறுமியின் கிரிப் தளர்ந்து எந்த நேரத்திலும் அவர் கீழே விழுந்துவிடக்கூடும் என்ற ஆபத்தான சூழல் நிலவியது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவரும், துணிச்சலாகச் செயல்பட்ட உள்ளூர் இளைஞர் ஒருவரும் உடனடியாக மீட்புக் களத்தில் இறங்கினர். அவர்கள் இருவரும் இணைந்து, கிரிப் தளர்ந்து கீழே விழுந்த அந்தச் சிறுமியை சாதுரியமாகப் பிடித்துப் பாதுகாப்பாக மீட்டனர்.
தக்க நேரத்தில் சாதுரியமாகச் செயல்பட்டு ஒரு பிஞ்சு உயிரைக் காப்பாற்றிய அந்த இளைஞருக்கும் மற்றும் காவலருக்கும் பொதுமக்கள் தங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆபத்தின் விளிம்பில் இருந்த சிறுமி எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
