“நாங்க சைனீஸ் இல்ல… இந்தியன்!”… இனவெறி பிடித்தவர்களுக்கு மழலைக் குரலில் சாட்டையடி… ஒரே வீடியோவில் தங்களை ஒதுக்கியவர்களுக்கு சவால் விட்ட சிறுமி…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வடகிழக்கு இந்திய மக்களை அவர்களது முக அமைப்பை வைத்து ‘சீனர்கள்’ என்று தவறாக அழைக்கும் இனவெறி மனப்பான்மைக்கு இந்தச் சிறுமி மிகவும் தைரியமாகவும், அதே சமயம் மழலை மாறாமலும் பதிலளித்துள்ளார். கார்கா டிங்கிள் கோங்கோ என்ற அந்தச் சிறுமி, தன்னை சீனர் என்று அழைத்தவர்களுக்குத் தனது உண்மையான இந்திய அடையாளத்தை ஆணித்தரமாக உணர்த்தும் வகையில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில், “எங்களை சீனர் என்று அழைக்காதீர்கள், நாங்களும் இந்தியர்கள்தான்; எங்களை இந்தியர்கள் என்றே அழையுங்கள் என்று அந்தச் சிறுமி மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொள்கிறார். தாங்கள் இட்டாநகரில் வசிப்பதாகவும், தங்களைச் சீனர் என்று மற்றவர்கள் அழைக்கும்போது தங்களுக்கு மிகவும் கோபமும் வருத்தமும் ஏற்படுவதாகவும் அவர் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். ஒரு நாட்டின் குடிமக்களை அவர்களின் தோற்றத்தை வைத்து எப்படிப் பாகுபாடு காட்டக் கூடாது என்பதை அந்தச் சிறுமியின் வார்த்தைகள் நெற்றியடியாக உணர்த்துகின்றன.

   

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிறுமியின் இந்தச் செயலைப் பலரும் பாராட்டி, அவருக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். “நீங்கள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சமம்; நீங்கள் மற்ற எல்லோரையும் விட உண்மையான இந்தியர்” என்று நெட்டிசன்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும், வடகிழக்கு மக்களுக்கு எதிரான இத்தகைய தவறான கண்ணோட்டங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்பதையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.