அட கொடுமையே… மரண பயம்னா என்னன்னே தெரியாதோ..?! எமனின் மடியில் அமர்ந்து போன் பார்க்கும் சிறுவன்… நெஞ்சை பதற வைக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

By Swetha on ஆனி 26, 2026

Spread the love

சமூக ஊடகங்களில் தற்போது அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. அதில், ஒரு சிறுவன் வீட்டின் மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தவாறு கட்டப்பட்டுள்ள ஒரு மூங்கில் கம்பின் மீது, மிகவும் ஆபத்தான உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் தனது மொபைல் போனைப் பயன்படுத்துவதில் எந்த அளவிற்கு மூழ்கியிருக்கிறான் என்றால், தான் எவ்வளவு ஆபத்தான இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்ற பயமோ அல்லது சுற்றியுள்ள சூழலைப் பற்றிய விழிப்புணர்வோ அவனுக்குச் சற்றேனும் இல்லை.

அந்த சிறுவனின் முழுக் கவனமும் மொபைல் திரையிலேயே பதிந்துள்ளது. அவன் ஒரு முறை கூட கீழே குனிந்து பார்க்கவோ, தனது பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கவோ முயலவில்லை. அந்த மூங்கில் கம்பு மிக உயரமான இடத்தில் இருப்பதால், சிறுவன் லேசாக நிலைதடுமாறினாலும் அது ஒரு பெரிய உயிர்ச்சேதத்தில் போய் முடியக்கூடும். மொபைல் போன் மீதான இந்த அதீத மோகமும், அவனது ஆபத்தான அலட்சியமும் வீடியோவைப் பார்ப்பவர்களைப் பதற வைக்கிறது.

   

இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் தங்களது கவலைகளையும் ஆதங்கங்களையும் தெரிவித்து வருகின்றனர். தற்காலத்தில் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மொபைல் போன் அடிமைத்தனம் எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதற்கு இந்த சம்பவமே ஒரு முக்கிய சான்று என அவர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தைகளுக்கு மொபைல் போன் தருவது தவறில்லை என்றாலும், அவர்கள் அதை எங்கு, எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பெற்றோர் எப்போதும் கண்காணிப்பது மிகவும் அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.