“காரில் தூக்கி கொண்டு ஓடிவந்த பெண்மணி…” ‘ஆம்புலன்ஸ் வரட்டும்’ என வாசலிலேயே நிறுத்திய மருத்துவர்கள்… மனிதநேயமற்ற கொடுமை… வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 29, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி ஒருவர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வந்த நிலையில், அங்கு அவசர சிகிச்சை அளிக்க மறுத்து அலட்சியம் காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிரேட்டர் நோய்டா விஜய் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்மணி இரவில் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் கோர விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரைக் கண்டுள்ளார். உடனடியாக மனிதநேயத்துடன் அந்த நபப்பையும், கதறி அழுதுகொண்டிருந்த அவரது மனைவியையும் தனது சொந்த காரிலேயே ஏற்றி அருகில் உள்ள உத்தம் மருத்துவமனைக்குச் விரைந்து கொண்டு சென்றுள்ளார்.

   

ஆனால், அங்கு இருந்த மருத்துவமனை நிர்வாகமும் ஊழியர்களும் தீவிர காயத்துடன் வந்த அந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுத்து, அவரை அனுமதிக்காமல் துரத்தியடித்துள்ளனர். மேலும், மற்றொரு ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்களை வாசலிலேயே காக்க வைத்துள்ளனர். “வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் வழியிலேயே உயிர் பிரிந்துவிடுமே” எனப் போராடியும் மருத்துவமனை கண்டு கொள்ளவில்லை. உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க மறுக்கும் இத்தகைய தனியார் மருத்துவமனைகளின் கொடூரப் போக்கைக் கண்டித்து இணையத்தில் நெட்டிசன்கள் பொங்கி எழுந்து வருகின்றனர்.