ஐயோ… எல்லாமே போச்சு… என் குடும்பத்தையே காணோம்… நேபாள வெள்ளத்தில் எல்லாம் இழந்து… அதிர்ச்சியில் உறைந்த பெண்… இராணுவப்படை மீட்பு…!

By Swetha on ஆவணி 29, 2026

Spread the love

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவான வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒரு பெண், நேபாள இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். தனது வீடு, குடும்பம் என அனைத்தையும் இழந்துவிட்ட அவர், தனக்கு நேர்ந்த இந்த திடீர் சோகத்தை நம்ப முடியாமல் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்து போயுள்ளார்.

இந்த ஆபத்தான சூழ்நிலையில், தங்களின் உயிரைப் பணையம் வைத்து மக்களைக் காப்பாற்றிய நேபாள இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு இமாலயப் பாராட்டுக்குரியது. அவர்களின் இந்தத் துணிச்சலான மீட்புப்பணி பல விலைமதிப்பற்ற உயிர்களைக் காத்துள்ளது.

   

https://twitter.com/SaffronChargers/status/2093272352394297552/video/1

   

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த மனிதப்பேரழிவு நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. பல உயிர்கள் பறிபோயுள்ளதோடு, குடும்பங்கள் பிரிந்துள்ளன; எண்ணற்ற மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தச் சூழலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை மீட்டெடுக்க வேண்டியது அனைவரின் தார்மீகக் கடமையாகும்.